காளப்பநாயகன்பட்டி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிப்பு !

காளப்பநாயகன்பட்டி அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 38-வது நினைவு தினம் அனுசரிப்பு !
X
காளப்பநாயகன்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜா தலைமையில், சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் திருவுருவ புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் உத்தரவின் பெயரில் தமிழக முழுவதும் அதிமுகவினர் எம்ஜிஆர் க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.அதன்படி நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்குட்பட்ட காளப்பநாயகன்பட்டி பேரூராட்சி பெரிய மாரியம்மன் கோவில் பகுதியில் எம்ஜிஆரின் திருவுருவ புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது காளப்பநாயகன்பட்டி பேரூர் கழக செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.இதில் சேந்தமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் எம்எல்ஏ,ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்ரீபாலன், சேந்தமங்கலம் விஜி, சேந்தமங்கலம் சிவபாலன் ,காளப்பநாய்கன்பட்டி பேரூர் இளைஞர் அணி பூவரசன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு அவரது திருவுருவ சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Next Story