கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு!
புதிய மேயர் வேட்பாளர் பெயரை அறிவித்த அமைச்சர் நேரு.
கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8 வது வீதி கணபதிபுதூர் பகுதியை சேர்ந்த 29 வார்டு மாமன்ற உறுப்பினராகிய ரங்கநாயகி 10 ம் வகுப்பு வரை படித்துள்ளார்.இவரது கணவர் பெயர் ராமச்சந்திரன் 29 வது வார்டு திமுக செயலாளராக உள்ளார். இவருக்கு குகன் என்ற ஆண் குழந்தையும், வாகிணி என்ற பெண் குழந்தையும் உள்ளது. மேலும் பேட்டியின்போது, அமைச்சர் கூறுகையில் கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாநகராட்சிக்கு தேவையான பணிகள் செய்யப்பட்டு வருகின்றது.இன்னும், மக்களின் தேவைகள் அறிந்து பணிகள் வேகப்படுத்தப்படும் என தெரிவித்தார். நாளை கோவை மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என கூறினார்.இந்த நிகழ்வின்போது அமைச்சர் முத்துச்சாமி, மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக்,தொ.அ.ரவி,தளபதி முருகேசன்,முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, துணைமேயர் வெற்றிச்செல்வன் மற்றும் மண்டல தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story