சுற்றித்திரிந்த 3,806 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை!
Thoothukudi King 24x7 |27 Aug 2024 3:15 AM GMT
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 3 ஆயிரத்து 806 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. அதிகாலை நேரங்களில் நடைபயிற்சிக்காக செல்பவர்களை தெருநாய்கள் அதிக அளவில் விரட்டுகின்றன. இதனால் விபத்துக்களும் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பேரில் மாநகராட்சி சார்பில் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஓராண்டில் மாநகர பகுதிகளில் சுற்றித்திரிந்த 3 ஆயிரத்து 806 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. அந்த நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதம் முதல் 6 மாதங்களுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் 150 நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Next Story