சிந்தாமணி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா

Krishna jayandhi

Krishna jayandhi
5000த்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
மதுரை மாவட்டம் சிந்தாமணி சின்ன அனுப்பானடி யாதவ சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ராதாகிருஷ்ணன் திருக்கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் 4ம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதான நிகழ்வில் 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 5ம் நாள் நிறைவு நிகழ்ச்சியாக உலக நன்மை வேண்டியும் மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.இந்த திருவிழாவுக்கு பூஜையில் அப்புறம் உதவி சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டு திருவிளக்கு ஏற்றி பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன் கோவில் நண்பர்கள் மற்றும் யாதவ இளைஞரணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story


