எடப்பாடியாருக்கு சின்னத்துரை பூங்கொத்து வழங்கி வரவேற்பு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு அமைப்பு செயலாளர் சின்னத்துரை பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ரயில் மூலம் நெல்லை ரயில் நிலையம் வருகை தந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் கழக அமைப்புச் செயலாளருமான என் சின்னத்துரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார்.
Next Story