மகளிர் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி
மகளிர் சுய உதவிக் குழுவினரின் கயவினைப் பொருட்கள் கண்காட்சி
மகளிர் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருள்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்
மகளிர் சுய உதவி குழுவில் வைக்கப்பட்டுள்ள கை அச்சு மருதாணியை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டு பார்வையிட்டார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா காவலர் மைதானத்தில் மகளிர் உற்பத்தி பொருட்கள் வாங்குவோர், விற்போர் சந்தை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மகளிர் குழுக்கள் கலந்து கொண்டு அவர்கள் தயாரித்த சமையல் எண்ணெய், கடலைமிட்டாய், தின்பண்டங்கள் மற்றும் அவர்கள் விளைவித்த விளைபொருட்களான வேர்க்கடலை, மாதுளை, வாழை பழங்கள், சிறுதானியங்கள் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். இவற்றை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மேலாண்மை அழகு மகளிர் திட்டத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மகளிர் திட்ட அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு மகளிர் உற்பத்தி பொருட்களை கண்காட்சி துவக்கி வைத்து பார்வையிட்டனர். ஏராளமானோர் மகளிர் குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை வாங்கிச்சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகளிர் சுய உதவிக்குழுவில் வைக்கப்பட்ட கை அச்சு மருதாணியை கையில் போட்டு கொண்டு பார்வையிட்டார்.