நீதிமன்ற உத்தரவு மீறி சர்ச் சுவர் இடிப்பு: 39 பேர் மீது வழக்கு

நீதிமன்ற உத்தரவு மீறி சர்ச் சுவர் இடிப்பு: 39 பேர் மீது வழக்கு
அருமனையில்
குமரி மாவட்டம் அருமனை பகுதியில் கடந்த 1964ஆம் ஆண்டு எல் எம் எஸ் டயோசிஸ் சார்பில் ஒரு சர்ச் தொடங்கப்பட்டது. இந்த சர்ச் 1997 ஆம் ஆண்டு சி எஸ் ஐ டயோசிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை எதிர்த்து சபை மக்கள் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக கடந்த 29 -7 -2024  அன்று குழித்துறை நீதிமன்றம் சர்ச் மற்றும் சொத்துக்கள் எல்லாம் அனைத்தும் எல் எம் எஸ் சர்ச் நிர்வாகத்திற்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கியது.         இதை அடுத்து போலீசார்  பாதுகாப்புடன் சர்ச்சை மீட்டு எல் எம் எஸ் சபையிடம் ஒப்படைத்து, போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றம் நிர்ணயித்த எல்லையில் சுற்றுச்சுவர்  கட்டி பணி முடித்தனர். இந்த நிலையில் சர்ச்சில் இருந்த மற்றொரு பிரிவினர் அருகில் இருந்த 5 சென்ட் நிலத்தில் அனுமதி இன்றி கட்டிடம் கட்டப்பட்டு மற்றொரு சர்ச்சை கட்டினார்கள். புதிதாக அனுமதி இன்றி கட்டப்பட்ட சர்ச்சுக்கு செல்ல எல் எம் எஸ் சர்ச் நிர்வாகிகளிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாதை கேட்டுள்ளனர்.       அப்போது விதிமுறைகளுக்கு உட்பட்டு 3 அடி பாதை கொடுப்பதாக கூறியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு ஒரு கும்பல் ஆயுதங்களுடன் எல் எம் எஸ் சர்ச் சுவரை இடித்து தள்ளியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அருமனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 39 பேர் மீது அருமனை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Next Story