வேலகவுண்டம்பட்டி :கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் 39- வது விளையாட்டு விழா.
Namakkal (Off) King 24x7 |5 Dec 2024 1:35 PM GMT
மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவம், உடல்நல மேம்பாடு, மனநல மேம்பாடு மற்றும் இலக்கு நோக்கிய தன்னார்வத் தூண்டுதலை மேம்படுத்தும் வகையில் இவ்விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று சிறப்பு விருந்தினராக நாமக்கல் மாவட்ட (ADSP) M.சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு விளையாட்டின் தனித்துவம், கல்வி, வேலைவாய்ப்பில் விளையாட்டின் பங்கு குறித்து சிறப்புரையாற்றியதுடன் விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்களுக்குச் சான்றிதழ்களையும், பதக்கங்களையும் வழங்கி தொடர் ஓட்டம், சிலம்பம், கராத்தே, துப்பாக்கி சுடுதல் போன்ற நிகழ்வுகளைத் தொடங்கி வைத்து விழாவினைச் சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜா, தாளாளர் முனைவர் ராஜன், பள்ளியின் ஆலோசகர் முனைவர் ராஜேந்திரன், செயலாளர் சிங்காரவேலு, இயக்குநர் ராஜராஜன், மெட்ரிக் பள்ளி முதல்வர் . S.S.சாரதா. மத்திய பள்ளியின் மூத்த முதல்வர் . P.யசோதா, முதல்வர் . P.காயத்ரி, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர். . M.சாந்தி, ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
Next Story