கரூர் கூட்டநெரிசல் விபத்து : 39 பேர் பலி – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆழ்ந்த இரங்கல் !

X
கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சார நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 38க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “கரூரில் 39 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. நினைவில் இருக்கும் வரலாற்றில் இத்தகைய துயர சம்பவம் நடந்ததில்லை. இது மிகுந்த வருத்தம் அளிக்கும் விபத்து,” என்று தெரிவித்தார். காவல்துறை மற்றும் கட்சி அமைப்புகள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டியிருந்தது என்றும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உயர்ந்த நிவாரண தொகையும் அரசு வேலை வழங்கவும் கேட்டுக் கொண்டார். மேலும் காயமடைந்தோர் உயர் தர சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்த சம்பவம் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
Next Story

