வாணியம்பாடி அருகே வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது! அவரிடமிருந்து 16 அரை சவரன் நகை நகை பறிமுதல்..

வாணியம்பாடி அருகே வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது! அவரிடமிருந்து 16 அரை சவரன் நகை நகை பறிமுதல்..
X
வாணியம்பாடி அருகே வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது! அவரிடமிருந்து 16 அரை சவரன் நகை நகை பறிமுதல்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வழக்கறிஞர் வீட்டில் 39 சவரன் தங்க நகைகளை திருடிய பணிப்பெண் கைது! அவரிடமிருந்து 16 அரை சவரன் நகை நகை பறிமுதல்.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சண்முக கணேசன் இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் பிள்ளைகள் உள்ளன அவர்களுக்கு திருமணம் நடந்து வெளியூரில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கறிஞர் சண்முக கணேசன் மற்றும் அவரது மனைவி இருவரும் தனியாக உள்ளனர். அவர்களுக்கு உதவியாக வீட்டில் பணி பெண்ணாக அதே பகுதியை சேர்ந்த லதா (வயது 50) என்பவர் கடந்த 11 மாதங்களாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பூஜை அறையில் வைத்திருந்த 39 சவரன் தங்க நகைகள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளதைக் கண்டு அதிர்ச்சடைந்துள்ளார். இது குறித்து சண்முக கணேசன் மனைவி கணவரிடம் கூறியதன் அடிப்படையில் அவரது மகன் சித்தார்த்தன் காந்தி பிரகாஷ் என்பவர் இது குறித்து கிராமிய காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்து கொண்டு வந்த லதாவிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். அதன்படியில் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் 39 சவரன் தங்க நகையை கொள்ளையடித்து அதனை அடகு கடையில் வைத்து பணத்தை செலவினம் செய்து வந்ததாக தெரிவித்துள்ளார் பின்னர் அவரிடம் இருந்து 16 அரை சவரன் தங்க நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைத்தனர். வாணியம்பாடி அருகே வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்தவர் வீட்டில் 39 சவரன் தங்க நகையை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story