புத்தாம்புதூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு- உலக சாதனை நிகழ்ச்சியை மாணவ மாணவியர் நிகழ்த்தினார்.

புத்தாம்புதூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு- உலக சாதனை நிகழ்ச்சியை மாணவ மாணவியர் நிகழ்த்தினார்.
புத்தாம்புதூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு- உலக சாதனை நிகழ்ச்சியை மாணவ மாணவியர் நிகழ்த்தினார். அண்மை காலமாக தமிழக முழுவதும் போதை பொருள்களால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. மேலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் சார்பில் போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம், புத்தாம்பூர் அருகே உள்ள வள்ளுவர் கலை அறிவியல் கலைக் கல்லூரியில் போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவிகள் போதை பழக்கவழக்கத்திற்கு எதிராகவும், போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிராகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி வளாகத்தில் 1500- மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் ,சமூக வலைத்தளங்களில் போதையினால் ஏற்படும் தீமைகள் குறித்து 600 மாணவர்கள் டிஜிட்டல் வரைபடங்கள் வரைந்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் #karuragainstdrugs #staynotodrugs #karuryouthaction என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தாளாளர் செங்குட்டுவன், மாவட்ட துணை ஆட்சியர் கருணாகரன்,கோட்டக்கலால் அலுவலர் சக்திவேல் ,அரவக்குறிச்சி வட்டாட்சியர் மகேந்திரன் உள்ளிட்ட மாணவ-மாணவியர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story