நாமக்கல்லில் கலைஞர் திருவுருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் திருவுருவ சிலையை திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில், அரசு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (22.10.2024 நண்பகல்) வருகை தந்தார்.வரும் வழியில் மல்லூர் பிரிவு சாலை, இராசிபுரம், புதுச்சத்திரம் , புதன்சந்தை, முதலைப்பட்டி பைபாஸ் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாமக்கல் - பரமத்தி சாலையில், செலம்ப கவுண்டர் பூங்கா அருகே திமுக சார்பில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின், 8 அடி உயர வெண்கல திருவுருவ சிலையை, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்,(22.10.2024 1:45 க்கு) திறந்து வைத்து பார்வையிட்டார். பீடத்துடன் சேர்த்து மொத்தம் 21 அடி ஆகும்.சிலையின் அருகே வைக்கப்பட்ட கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தி பின்னர் கருணாநிதியின் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், கூட்டணி கட்சியினர் உள்ளிட்டோரை பார்த்து உற்சாகமாக கை அசைத்து சென்றார்.தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில், மாநில அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, டாக்டர் மா.மதிவேந்தன், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். இராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ, சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை செயலாளா் இறையன்பு குத்தூஸ் இசை நிகழ்ச்சியும், கலைச்சுடர்மணி நாமக்கல் பிரபு வேணுகோபால் குழுவினரின் மங்கல இசை கச்சேரியும் நடைபெற்றது.

Next Story