ஈரோட்டில் மதுபான பார்களிலிருந்து 3936 மதுபாட்டில்கள் பறிமுதல்
மாவட்ட ஆட்சியர்
ஈரோட்டில் மதுபான பார்களிலிருந்து 3936 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் 183அரசு மதுபான கடைகளுடன் இணைந்துள்ள மதுக் கூடங்கள் மற்றும் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் மதுவிலக்கு மற்றும் சட்ட ஒழுங்கு காவல்துறையினர் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தலைமையிலான குழுவினர் தணிக்கை மேற்கொள்ளபட்டு 3936 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூலம் மொத்தமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் கண்காணிப்பாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
Next Story