ஓசூர்: சரக்கு வேனில் 396 கிலோ இருந்த குட்கா பறிமுதல் டிரைவர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசார் ரிங்ரோடு கொத்தூர் ஜங்ஷன் அருகே நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற சரக்கு வேனை போலீசார் நிறுத்தி சோதனையிட போது அதில் மூட்டை, மூட்டையாக 396 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஜி.அள்ளியை சேர்ந்த மாரிசாமி (46) என தெரிய வந்தது. இவர் கர்நாடகாவில் இருந்து கோவைக்கு குட்கா கடத்த முயன்றது தெரிய வந்தது. இதை அடுத்து போலீசார், டிரைவர் மாரிசாமியை கைது செய்தனர். பின்னர் 7 லட் சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 396 கிலோ குட்கா மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர்.
Next Story

