கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக நடைபெற்ற பூமிபூஜை.

கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக நடைபெற்ற பூமிபூஜை.
X
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று கட்டடப் பணிகளை தொடங்கிவைத்து பள்ளி மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்குள்பட்ட கொருக்கை, பல்லி, நாட்டேரி ஆகிய அரசுப் பள்ளிகளில் ரூ.3.99 கோடியில் 17 வகுப்பறைகள் கட்டும் பணிகளுக்காக நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று தொடங்கிவைத்தாா். கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.39 கோடியில் 6 வகுப்பறைகள், பல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடியில் 7 வகுப்பறைகள், நாட்டேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.91 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதற்கு நபாா்டு திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்எல்ஏ பூமிபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்று கட்டடப் பணிகளை தொடங்கிவைத்து பள்ளி மாணவா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
Next Story