பூட்டிய வீட்டில் ஒரு மாதமாக தொடர் கொள்ளை நடத்திய 4 கொள்ளையர்கள் கைது

பூட்டிய வீட்டில் ஒரு மாதமாக தொடர் கொள்ளை நடத்திய 4 கொள்ளையர்கள் கைது

கொள்ளை அடிக்கப்பபட்ட பணம் நகை

பூட்டிய வீட்டில் ஒரு மாதமாக தொடர் கொள்ளை நடத்திய 4 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் அருகே திருநகர் பகுதியில் பூட்டிய வீட்டில் கடந்த ஒரு மாதமாக தொடர் கொள்ள நடத்திய கொள்ளையர்கள் நான்கு பேர் கைது. திருநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களிடமிருந்து ரூபாய் 10.50 லட்சம் மதிப்புள்ள 23 கால் பவுன் நகை மற்றும் பணம் ரூபாய் 48 ஆயிரம் மீட்பு. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அடுத்துள்ள திருநகர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக எஸ்ஆர்வி நகர், நேதாஜி நகர், திருவள்ளுவர் நகர் பகுதிகளில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 32 பவுன் நகைகள் திருடி சென்றனர்.

இதனால் திருநகர் காவல் நிலையத்தில் உரிமையாளர்கள் புகார் செய்தனர். அதன் பேரில் திருநகரி இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐ பேரரசி மற்றும் தனிப்படை போலீஸார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதில் நேற்று முன் தினம் நகர் பகுதியில் வாகன சோதனையின் போது பிடிபட்டவரை விசாரித்தபோது திருநகர் பகுதியில் திருடியது தெரியவந்தது. கொள்ளையில் ஈடுபட்ட வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கிலி மகன் சீமான் (வயது 49) இவர் மீது 32 வழக்குகள் உள்ளது. பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி என தெரிய வந்தது.

இவனது கூட்டாளிகள் வாடிபட்டி அருகே விராலிபட்டியை சேர்ந்த சதாசிவம் மகன் சசிகுமார் (வயது 29) , தேனூர் பகுதியை சேர்ந்த பழனிக்குமார் மகன் முத்து (வயது 22) ,தேனூர் ராஜ்குமார் மகன் சிவராஜன் (வயது 25) ஆகியோர் பூட்டிய வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர் இதில் நகைகளை வாடிப்பட்டி, விராலிப்பட்டி கம்மாக்கரை மற்றும் தேனூர் பகுதியிலும் நகையை மறைத்து வைத்தது தெரியவந்தது.

போலீஸார் விசாரணையை தொடர்ந்து திருநகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் தனிப்படை போலீஸார் கேரி பை களில் கட்டி மறைத்து பதுக்கிவைத்த 23.கால் பவுண் நகைகளை கைப்ற்றினர். மேலும் பணம் ரூபாய் 48 ஆயிரத்தையும் கைப்பற்றினர். மேலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சீமான், சசிகுமார் சங்கிலி,முத்து உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தற்தகாக மதுரை மாநகரகாவல்துறை ஆணையர் லோகநாதன் திருநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சரவணன் மற்றும் தனிப்படை போலீஸாரை பாராட்டினார்.

Tags

Next Story