இருசக்கர வாகனத்தில் புகுந்த 4 அடிநீள நல்லப்பாம்பு

இருசக்கர வாகனத்தில் புகுந்த 4 அடிநீள நல்லப்பாம்பு
பிடிபட்ட பாம்பு
இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த நேமந்தபுரம் பகுதியில் உடல்நிலை பாதிக்கப்பட்ட பசுமாட்டிற்கு மருத்துவம் பார்பதற்காக அரசு கால்நடை மருத்துவமனை மருத்துவர் வினித் என்பவர் சென்றுள்ளார்.

அப்போது நேமந்தபுரத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டின் பின்புறத்தில் இருந்த கால்நடைக்கு மருத்துவம் பார்த்துவிட்டு மீண்டும் தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்த போது அருகேயுள்ள புதர்களில் இருந்து வந்த நான்கு அடி நீளம் உள்ள நல்ல பாம்பு அவரது இருசக்கர வாகனத்தில் ஏறுவதை பார்த்து அங்கிருந்து அவர் பதறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து உடனடியாக ஒடுகத்தூர் தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினர் இருசக்கர வாகனத்தின் சீட்டிற்கு அடியில் பதுங்கி இருந்த நான்கு அடி நீளமுடைய நல்ல பாம்பை போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக மீட்டனர். பின்னர் பிடிப்பட்ட பாம்பை அருகே உள்ள ஓட்டேரி பாளையம் காப்புக்காட்டில் கொண்டு சென்று விட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story