காங்கேயத்தில் காவல் நிலையம் புகுந்து தகாத வார்த்தைகள் பேசி காவலர்களை தாக்கிய 4 பேர் கைது
Kangeyam King 24x7 |21 July 2024 4:59 AM GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள பள்ளியில் படித்துவரும் மாணவியை நேற்று மாலை கை காட்டிய இளைஞரை விசாரணைக்கு கூட்டி வந்த நிலையில் இளைஞரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய 4 இளைஞர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேயம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வரும் 17 வயது மாணவி. நேற்று மாலை பள்ளி முடிந்த பின்பு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார் அப்போது இலங்கை அகதிகள் முகமை சேர்ந்த விஸ்வா (20) என்ற இளைஞர் சாலையில் நின்று கைகாட்டியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக சென்ற வெள்ளகோவில் காவலர் மணிகண்டன் பிடித்து விசாரித்துவிட்டு சந்தேகத்தின் பெயரில் காங்கேயம் காவல்நிலையத்தில் ஒப்படைத்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் விஸ்வாவை காவல் துறையினர் அழைத்து சென்றது இலங்கை அகதிகள் முகாமிற்குள் இருக்கும் குடும்பத்தினருக்கும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விஸ்வாவின் சகோதர்கள் மற்றும் இலங்கை முகாமை சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் காங்கேயம் காவல் நிலையம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரண்டு காவலர்கள் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். மற்ற காவலர்கள் மாலை நேர ரோந்து பணிக்கு சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முத்தியா நிலையில் காவல் நிலையம் வழியில் சென்ற பொதுமக்கள் வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும் காவலர்களை ஒருமையில் பேசியதுடன் தங்களது செல்போனில் வீடியோக்களும் எடுத்துள்ளனர். இந்நிலையில் அருகில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோமதி மற்றும் பெண் காவலர்கள் காவல்நிலையத்தில் புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து சமாதானப்படுத்த முயற்சி செய்கையில் பெண் மற்றும் ஆண் காவலர்களை அடிக்கும் விதத்தில் முண்டியடித்து கொண்டு கீழே தள்ளிவிட்டு தாக்கினர். பின்னர் காவல் நிலையம் முன்பு ஈரோடு பழனி நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி கூச்சலிட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் காவலர்கள் ரகளையில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்தனர். இதில் 3 நபர்கள் மட்டுமே மாட்டிக்கொண்டனர் மற்றவர்கள் தப்பி ஓடினர் . பின்னர் விசாரணையில் அவர்கள் மாணவியிடம் கைகாட்டிய விஸ்வாவின் சகோதரர்களான விஜய் (28), விவேக் (24), கோபிநாத் (22) ஆகியோர் என தெரியவந்தது. பின்னர் காங்கேயம் காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு விஸ்வா உட்பட விஜய் , விவேக் , கோபிநாத் ஆகிய 4வரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். காங்கேயம் பகுதியில் காவல் நிலையம் வந்து காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியும் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story