வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 4 நாட்களாக உணவு வழங்கும் திமுகவினர்
Komarapalayam King 24x7 |3 Aug 2024 12:06 PM GMT
காவிரி ஆற்றில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான்கு நாட்களாக உணவு வழங்கும் தெற்கு நகர திமுகவினர் .
கர்நாடக மாநிலத்தில் தொடரும் கன மழை காரணமாக காவிரி ஆற்றில் மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர்வெளியேற்றம் காரணமாக காவேரியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒரு உயிர்இழப்புக்கூட நடைபெறக்கூடாதென மாண்புமிகு தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில் வருவாய்த்துறை நகராட்சிதுறை காவல்துறை தீயணைப்புத்துறை மின்சாரத்துறை களை போர்கால அடிப்படையில் மாவட்டஆட்சியர் மருத்துவர் ச.உமா IAS தலைமையில் குமாரபாளையம் காவேரியாற்றங்கரையோரம் தாழ்வானபகுதிளில் வசிக்கும் 772 நபர்களை JKK நடராஜா மண்டபம் ராஜேஸ்வரி மண்டபம் ஐயப்பா மண்டபம் மற்றும் புத்தர் பள்ளி ஆகிய நான்குஇடங்களில் அவர்களின் உடமைகளுடன் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் பாதிக்கப்பட்ட மக்கள் 772 நபர்களுக்கு தெற்குநகர கழகம் சார்பில் மூன்றுவேளையும் உணவுகள் வழங்க மாவட்ட கழகசெயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் உத்தரவிட்டதின் பேரில் தெற்கு நகரகழக செயலாளர் ஞானசேகரன் ஏற்பாட்டில் முன்னாள் நகரகழகசெயலாளர் செல்வம் மற்றும் நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இளைஞரணி மகளிர்அணி மாணவரணி மற்றும் மாவட்ட,நகர,சார்பு அணி நிர்வாகிகள் கழகத்தின் மூத்தமுன்னோடிகள் முன்னிலையில் மேற்கண்ட நான்குஇடங்களில் காலை மதியம் இரவு உணவுகள் வழங்கப்பட்டுவருகிறது...
Next Story