வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 4 டன் முருங்கைக்காய் வரத்து
Kangeyam King 24x7 |16 Aug 2024 11:38 PM GMT
வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 4 டன் முருங்கைக்காய் வரத்து
வெள்ளகோவிலில் வாரந்தோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளான மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், சின்னாத்திபாளையம், பெரியாத்திபாளையம், பாப்பம்பாளையம், மாந்புரம் ஆகிய பகுதி விவசாயிகள் தங்களது தோட்டங்களில் அறுவடை செய்யும் முருங்கை காய்களை விற்பனைக்கு கொண்டு வாருங்கள். அதன்படி வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 60 விவசாயிகள் முருங்கக்காய் கொண்டு வந்து இருந்தனர். 4 டன் வரத்து இருந்தது. இந்த முருங்கக்காய் வாங்குவதற்கு வெள்ளகோவில், முத்தூர், காங்கேயத்தை சேர்ந்த வியாபாரிகள் வந்திருந்தனர். அவர்கள் ஒரு கிலோ கரும்பு முருங்கை ரூ.30 க்கும், மரம் முருங்கை ரூ.15க்கும், செடி முருங்கை ரூ 25க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை மார்க்கெட்கள் மற்றும் உணவகங்களுக்கு அனுப்பி வைப்பதாக முருங்கை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story