நித்திரவிளையில் கோவிலை இடித்ததாக 4 பேர் கைது

X
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வைக்கல்லூர் பகுதியில் ஐயா வைகுண்டசாமி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இருக்கும் இடம் சம்பந்தமாக அதே பகுதி சேர்ந்த கோபி (62) என்பவருக்கும் அவரது தங்கை சசிகலா (48) என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் சசிகலா தரப்பினர் நேற்று கோவிலை இடித்து தரைமட்டமாக்கி அதிலிருந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்த கோபி அந்த கும்பரிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது அந்த கும்பல் கோபிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது சம்பந்தமாக நித்திரவிளை போலீசில் கோபி புகார் செய்தார் புகாரளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலா (48), கிராத்தூர் பகுதியை சேர்ந்த ரோஜி (42), கருங்கல் பகுதியை சேர்ந்த வினு (20), காஞ்ஞாம் புறம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (40) ஆகியோரை கைது செய்து கோவிலை இடிக்க பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story

