விருத்தாசலம் அருகே நிலத் தகராறில் 4 பேர் மீது வழக்கு
Virudhachalam King 24x7 |26 Aug 2024 3:00 PM GMT
தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
விருத்தாசலம் அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் நடனசபாபதி (வயது 74). இவருக்கும் க. இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் தரப்பினருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று நடன சபாபதி க.இளமங்கலம் கிராமத்தில் உள்ள தன் மாமனார் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கதிரவன் (55), அவரது சகோதரர் ராமரங்கப்பா, தவமணிகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் சேர்ந்து நடன சபாபதி வயலுக்குள் அத்துமீறி நுழைந்து டிராக்டரை கொண்டு உழவு ஓட்ட முயற்சித்துள்ளனர். இதனைப் பார்த்த நடன சபாபதியின் மாமியார் ஞானஜோதி (82), என்ற மூதாட்டி ஏன் எங்கள் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து பிரச்சனை செய்கிறீர்கள் என கேட்டதற்கு அசிங்கமாக திட்டி தாக்கியுள்ளனர். இதனை தடுக்க சென்ற நடன சபாபதியையும் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடன சபாபதி கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கதிரவன் உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கதிரவன் தரப்பினர் நடனசபாபதி தரப்பினரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story