கந்தம்பாளையம் அருகே அடிதடி ககராறு 4 பேர்கள் கைது.

கந்தம்பாளையம் அருகே அடிதடி ககராறு 4 பேர்கள் கைது.
கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரத்தில் முன்விரோத காரணமாக அடிதடி தகராறில் ஈடுபட்ட 4 பேர்கள் கைது.
பரமத்தி வேலூர்,செப்.3:  பரமத்தி வேலூர் தாலூகா பொத்தனூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் (30),ஈரோடு மாவட்டம் ரயில்வே காலனி வாய்க்கால் மேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் அசோக் (30) ஆகிய இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் மூலம் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அசோக் மனைவி நந்தினியை மணிகண்டன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நந்தினியின் தாயார் லோகாம்பாள் 30 ஆம் தேதி இரவு அசோக்கை காணவில்லை என தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் முடியவில்லை இதனால் நந்தினியும் மணிகண்டனையும் அசோக்கை தேடி பார்க்குமாறு கூறியுள்ளார். தகவல் தெரிந்து மணிகண்டனும் நந்தினியும் கந்தம்பாளையம் அருகே உள்ள வசந்தபுரத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் அசோக்கை தேடி விசாரித்துள்ளனர். ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த குகன் என்பவரிடம் அசோக்கை கேட்டபோது அசோக் தன்னிடம் 35 ஆயிரம் பணம் வாங்கியுள்ளதால் பணத்தை நீங்கள் கொடுத்தால் தான் இங்கிருந்து செல்ல முடியும் என்று குடோனின் கேட்டை பூட்டி உள்ளார். இதில் குகனுக்கும் மணிகண்டனுக்கும் வாய் தகரம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த குகன் அவரது நண்பர்கள் சிலம்பரசன்,கரன் ஆகியோ மணிகண்டனை தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்ந்து மேல் சிகிச்சைக்காக  நாமக்கல் அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். தன்னைத் தாக்கியதாக நல்லூர் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் செய்தது அடுத்து மணிகண்டன் வாக்குமூலத்தின் பேரில் அசோக்,சிலம்பரசன் குகன்,கரன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story