கடலூர் -விருத்தாசலம் 4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க சென்னை கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் உத்தரவு

கடலூர் -விருத்தாசலம் 4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க சென்னை கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் உத்தரவு
கடலூர் -விருத்தாசலம் 4 வழி சாலை பணிகளை விரைந்து முடிக்க சென்னை கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் உத்தரவிட்டார்...
விருத்தாசலம் நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், விபத்துகளை தடுக்கவும், கடலூர் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கூரைப்பேட்டை புறவழிச்சாலை பிரிவில் நகரத்திற்கு செல்லும் வகையில் ரூபாய் 27. 96 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த பணிகள் அனைத்தும் கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்து சோதனை ஓட்டம் முடிந்து பாலம் வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த உயர்மட்ட மேம்பாலத்தை சென்னை கண்காணிப்பு பொறியாளர் தனசேகர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது பாலத்தின் உறுதித் தன்மை, சாலையின் தரம் குறித்து அதற்கான பிரத்தியேகமான கருவிகள் மூலம் ஆய்வு செய்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கடலூர் விருத்தாசலம் இடையே 43 கி.மீ அளவிற்கு கடலூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 226 கோடியில் 4 வழி சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் குறிஞ்சிப்பாடியில் உயர் மட்ட மேம்பாலம், சாலைகளில் ஆங்காங்கே குறுக்கிடும் ஓடைகளின் இடையே சிறு பாலங்கள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகளையும் அவர் பார்வையிட்டு பணிகள் தரமாக நடக்கிறதா? சாலைகள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு போடப்படுகிறதா? என ஆய்வு செய்ததுடன் மழைக்காலத்திற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும் உத்தரவிட்டார். அப்போது தேசிய நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவி, உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன், சுகந்தி, உதவி பொறியாளர்கள் சரவணன், கலையரசி ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story