வேலுரியில் போதை மாத்திரை விற்பனை 4 பேர்கள் கைது.

வேலுரியில் போதை மாத்திரை விற்பனை செய்த 4 பேர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றும் பொத்தனூர் பகுதியில்  மர்ம நபர்கள் அதிக அளவு போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தெற்கு நல்லியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் சங்கர் (24) என்பவர் பரமத்தி வேலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், போதைப்பழக்கம் இருந்த தன்னிடம் பொத்தனூரைச் சேர்ந்த கோபிநாத் மகன் நித்திஷ்(22) தெற்குநல்லியாம்பாலையத்தைச் சேர்ந்த ராஜா மகன் பசுபதி(24) கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் கௌதம்(21)  பாலப்பட்டியைச் சேர்ந்த நடராஜன் மகன் அபிஷேக்(17) ஆகியோர் போதை மாத்திரைகளை வாங்கி அதனை ஊசி மூலம் நரம்புகளில் செலுத்தினால் அதிகப்படியான போதை வரும் எனக் கூறி தன்னிடம் ஒரு மாத்திரை 400 முதல் 500 வரை விற்பனை செய்ததாகவும், அந்த மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியதால் தனது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட தாக்கவும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நான்கு பேரும் தன்னிடம் போதை மாத்திரை தொடர்ந்து வாங்க வற்புறுத்தி வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார்  நேற்று முன்தினம் இரவு நல்லியம்பாளையம் அருகே நான்கு பேரும் போதை மாத்திரைகள் பயன்படுத்தி வருவதாக கிடைத்த தகவலை எடுத்து அங்கு சென்ற காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நான்கு பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர் . விசாரணையைத் தொடர்ந்து நித்திஷ், பசுபதி, கௌதம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அபிஷேக் கை நாமக்கல் இளஞ்சிரார் நீதி குழும நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டார்.
Next Story