பள்ளப்பட்டி- சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிதி உதவி ஆட்சியர் தங்கவேல் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
Karur King 24x7 |11 Oct 2024 6:58 AM GMT
பள்ளப்பட்டி- சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிதி உதவி ஆட்சியர் தங்கவேல் வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
பள்ளப்பட்டி- சாக்கடை கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த பள்ளி மாணவன் குடும்பத்தினருக்கு 4 லட்சம் நிதி உதவி ஆட்சியர் தங்கவேல் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, பள்ளப்பட்டி ஹபீப் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலி மகன் முகமது உஸ்மான் வயது 13. இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். அக்டோபர் 8ஆம் தேதி மாலை பள்ளப்பட்டியில் கனமழை பெய்தது. அப்போது பள்ளி விட்டு வந்த சிறுவன் முகமது உஸ்மான், அப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் சைக்கிளுடன் விழுந்ததில் அடித்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள நங்காஞ்சி ஆற்றில், சடலமாக தீயணைப்பு நிலைய வீரர்களால் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றார். இதன் தொடர்ச்சியாக தமிழக அரசு விதிமுறையின் படி உயிர் சேதம் அடைந்ததற்கான நிவாரணத்தொகை ரூபாய் 4 லட்சத்திற்கான காசோலையை, நேற்று மாலை அக்டோபர் 10ம் தேதி பள்ளப்பட்டிக்கு நேரடியாக சென்று மாணவனின் தாயார் ரிஜ்வானா பர்வீன் அவர்களிடம் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, பள்ளப்பட்டி நகர் மன்ற தலைவர் முனைவர் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story