வெள்ளகோவிலில் கடைக்குள் கார் புகுந்து 4 வாகனங்கள் சேதம்

வெள்ளகோவிலில் கடைக்குள் கார் புகுந்து 4 வாகனங்கள் சேதம்
வெள்ளகோவிலில் கடைக்குள் கார் புகுந்து 4 வாகனங்கள் சேதம் வெள்ளகோவில் காவல்துறை விசாரணை
வெள்ளகோவில் முத்தூர் சாலை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம். இவர் மேட்டுப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகில் முத்தூர்  சாலையில் அலுமினியம் கண்ணாடி கடை வைத்துள்ளார். அப்பகுதியில் நேற்று காலை மழை பெய்தது. அப்போது அவ்வழியாக வெள்ளகோவில் உப்பு பாளையத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் (45) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென நிலைதடுமாறி கடைக்குள் புகுந்தது. இதில் கடையின் முன்புற பந்தல், அங்கிருந்து சில கண்ணாடிகள், அலுமினிய தகடுகள், 4 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்ததுடன் காரும் சேதமானது. அச்சமயத்தில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story