ஆண்டிபட்டி அருகே நாயை தூக்கிலிட்டு கொலை செய்த 4 பேர் கைது

X
ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு வாரசந்தை வளாகத்தில் ஆடுகளை கடித்ததாக கூறி, சிலர் நாய் ஒன்றை தூக்கிலிட்டு கொலை செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள், விலங்குகள் ஆர்வலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதையடுத்து நாயை கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கடமலைக்குண்டு கால்நடை உதவி மருத்துவர் சதீஷ்குமார் கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வீடியோவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பூமிராஜ், முருகன், செல்வம், மலைச்சாமி ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.இதையடுத்து அவர்கள் மீது விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

