வெடிகுண்டு வீச்சு வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பின் கைது

X
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மகாராஜபுரம், கிழக்கு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் என்ற மணியாச்சி மணி (35). இவர் மீது கொலை, வெடிகுண்டுகள் வீச்சு, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் புளியம்பட்டி, முறப்பநாடு, விருதுநகர் ஆகிய காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இவருக்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்பேரில், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் உமையொருபாகம் தலைமையிலான போலீசார், கொப்பம்பட்டி பகுதியில் பைக்கில் சென்ற மணிகன்டனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

