ஆடு திருட்டை தடுத்தவருக்கு கத்திக்குத்து 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலுக்கு வலை!

ஆடு திருட்டை தடுத்தவருக்கு கத்திக்குத்து 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பலுக்கு வலை!
குற்றச்செய்திகள்
விராலிமலை ஒன்றியம் களமாவூர் ஊராட்சி கண்ணன்கோன் பட்டியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் 45 இவர் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது நாய் குறைக்கும் சத்தம் கேட்டது எழுந்து வந்து பார்த்தபோது பக்கத்து வீட்டின் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை நாலு பேர் கொண்ட கும்பல் திருடி செல்ல முயன்றது. இதையடுத்து ரவிச்சந்திரன் சத்தம் போடவே ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் கத்தியால் ரவிச்சந்திரனின் கையில் குத்தினர் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வரவே மர்ம நபர்கள் நாலு பேரும் தப்பி சென்றனர். இதில் காயம் அடைந்த ரவிச்சந்திரன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பெயரில் மாத்தூர் போலீசார் வழக்கு பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து ஆடு திருட வந்த கும்பலை தேடி வருகின்றனர்.
Next Story