ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அவரது உருவப் படத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த விசிகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளால் பரபரப்பு
Ariyalur King 24x7 |19 Dec 2024 7:52 AM GMT
ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அவரது உருவப் படத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்த விசிகவினருக்கும் போலீசாருக்கும் தள்ளு முள்ளால் பரபரப்பு ஏற்பட்டது.
அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட மேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசியதை கண்டித்து அரியலூர் மாவட்ட அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் ஜெயங்கொண்டம் நான்கு ரோடு அருகே உள்ள தபால் துறை அலுவலகத்திற்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு நான்கு ரோட்டு பகுதிக்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீரென அமித்ஷாவின் உருவப்படத்தை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயற்சித்தனர். அப்போது போலீசாருக்கும் வி.சி க-வினருக்கும், உருவப்பட பதாகையை ஒருவருக்கொருவர் இழுத்துப் பிடித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக போலீசார் பதாகையை எரிக்க விடாமல் அப்புறப்படுத்தினர்.
Next Story