ராணுவ வீரரின் சொகுசு பைக் எரிப்பு - 4 பேர் மீது வழக்கு
Nagercoil King 24x7 |19 Dec 2024 10:56 AM GMT
குலசேகரம்
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே கூடைதூக்கி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்திய துணை இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயினி (35) இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. மணிகண்டனின் சகோதரர் ஜெயச்சந்திரன் (49) இவர் அதிமுக பிரமுகர். இவர்கள் அருகருகே வசித்து வருகின்றனர். வழிப்பாதை தொடர்பாக இரு தரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஜெயினியின் வீட்டுக்கு ஜெயச்சந்திரன் மனைவி விஜி மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து சென்று ஜெயினியின் வீட்டில் இருந்த அவரது பெரியம்மா ஜெயசீலியை சரமாரியாக அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் நிறுத்தி இருந்த மணிகண்டனின் சொகுசு பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ கொமுத்தினார்களாம். இதில் பைக் முழுவதும் தீயில் கருகி நாசமானது. இதனை ஜெயினி தட்டி கேட்டபோது அவருடைய பெண்மைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்கள். இது குறித்து ஜெயினி குலசேகரம் போலீசில் நேரத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அதிமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் அவரது மனைவி விஜி மற்றும் வேதபூ, குமார், ராஜன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story