பேராவூரணியில், ஜன. 4 இல் மின்தடை
Thanjavur King 24x7 |2 Jan 2025 11:54 AM GMT
மின்சார வாரியம்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் பராமரித்தலும்) எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஜனவரி 4ஆம் தேதி சனிக்கிழமை அன்று பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான பேராவூரணி நகர், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திக்கொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். மேலும், பொதுமக்கள் மின்தடை பற்றிய புகார்களுக்கு மின்னகம் 9498794987 என்ற எண்ணை அழைத்து புகார்கள் மற்றும் மின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
Next Story