சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால் அச்சுப்பட்டைமுறிந்து முள் வேலிக்குள் வேன் கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியதில் 4 மாத கைக்குழந்தை பரிதாபமாக பலி

சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால் அச்சுப்பட்டைமுறிந்து முள் வேலிக்குள் வேன் கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியதில் 4 மாத கைக்குழந்தை பரிதாபமாக பலி
சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால் அச்சுப்பட்டைமுறிந்து முள் வேலிக்குள் வேன் கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியதில் 4 மாத கைக்குழந்தை பரிதாபமாக பலி
நரிக்குடி அருகே சாலையின் நடுவே இருந்த பள்ளத்தால் அச்சுப்பட்டைமுறிந்து முள் வேலிக்குள் வேன் கவிழ்ந்து கோர விபத்தில் சிக்கியதில் 4 மாத கைக்குழந்தை பரிதாபமாக பலியானார். 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்... 4 மாத கைக்குழந்தை பலி...திதி கொடுக்க ராமேஸ்வரம் சென்ற போது கோர விபத்து. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம் தவிர்த்தான் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரின் தந்தையான ராமையா (60) என்பவர் கடந்த வருடம் இறந்து போனார். இதனைத் தொடர்ந்து ராமையா இறந்து ஒரு வருடம் திரும்பிய நிலையில் அவரது மகனான திருப்பதி (42) என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினருடன் திதி கொடுக்க வேண்டி ராமேஸ்வரம் செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்றிரவு 11 மணியளவில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் 4 மாத குழந்தையான சம்யுக்தா உள்பட சுமார் 30 பேர் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு திதி கொடுக்க வேண்டி வேனில் சென்று கொண்டிருந்தனர். வண்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நதிக்குடி பகுதியை கருப்பையா மகன் பெருமாள் (45) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மானாசாலை அடுத்துள்ள சாத்திசேரி வல்லக்குளம் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் வேன் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையின் இருந்த பெரிய பள்ளத்தில் வேன் சக்கரம் சிக்கிய நிலையில் வேனின் அச்சுப்பட்டை முறிந்து சாலையில் அங்கும் இங்கும் தருமாறாக ஓடியது.இந்த நிலையில் வேனில் பயணம் செய்தவர்கள் அனைவரும் கூச்சலிட்டு அலறிய நிலையில் டிரைவரின் காட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென அருகிலிருந்த அடர்ந்த முள் வேலிக்குள் புகுந்து உருண்டு விபத்தில் சிக்கியது. இன்று அதிகாலை கண்ணிமைக்கும் நேரத்தில் நரிக்குடி - ராமேஸ்வரம் சாலையில் நடந்த இந்த கோர விபத்தில் வேனில் பயணம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமகிருஷ்ணா புதூர் பகுதியை சேர்ந்த கோபிநாத்(37) - ராணி தம்பதியரின் 4 மாத பெண் குழந்தையான சம்யுக்தா விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் பரிதாபமாக பலியானார்.மேலும் வேனில் பயணம் செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம் தவிர்த்தான் பகுதியை சேர்ந்த திருப்பதி (40),தமிழ்செல்வி (35),சீனியம்மாள், முனீஸ்வரி, கோபிநாத்,ராணி அஜித், மற்றும் ராஜா உள்பட சுமார் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில் விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் விபத்தில் சிக்கிய வேனில் பயணம் செய்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக பரமக்குடி மற்றும் திருச்சுழி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்த 4 மாத குழந்தையான சம்யுக்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story