பரமத்திவேலூர் அருகே சூதாடிய 4 பேர் கைது.

பரமத்திவேலூர் அருகே சூதாடிய 4 பேர் கைது.
X
பரமத்திவேலூர் அருகே சூதாடிய 4 பேர்களை கைது செய்தனர்.
பரமத்திவேலூர், ஜன.4: பரமத்திவேலூர் அருகே வெங்கரை காவிரி ஆற்றில் உள்ள சுடுகாட்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக வேலூர் போலீசாருக்கு ரகசியதகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சுடுகாட்டு பகுதிக்கு சென்ற னர்.அப்போது அங்கு பணம் வைத்துசூதாடி கொண்டிருந்தவர்களை | சுற்றி வளைத்து பிடித்தனர். ஆனால் அப்போது ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். மற்ற 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் வெங்கரை பகுதியை சேர்ந்த பெரியசாமி, சத்யராஜ். வீராச்சாமி,பரமத்தி வேலூர் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பதும் தெரியவந்தது. தப்பி ஓடியவர் பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் பதிவு செய்து நான்கு பேர்களை கைது செய்தனர்.
Next Story