மருத்துவமனையில் புகுந்து தாக்கிய 4 வாலிபர்கள் கைது

X
கலவை அடுத்த பென்னகர் கிராமம் மேட்டுகாலனி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி காஞ்சனா. மகன்கள் ஆனந்தன், ராமன். இவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வாழைப்பந்தலில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கலவை அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், ஹரிதாஸ், ரவிச்சந்திரன், தமிழரசன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து, ஆனந்தன் மற்றும் தேவராஜ் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்கள் கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன், ஹரிதாஸ் ரவிச்சந்திரன், தமிழரசன் ஆகியோர் ஆனந்தன், தேவராஜ், காஞ்சனா, ராமன் ஆகியோரை கலவை அரசு மருத்துவமனையில் வைத்து தாக்கியுள்ளனர். காயம் அடைந்தவர்கள் கலவை போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ஹரிதாஸ், ரவிச்சந்திரன், தமிழரசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story

