கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி உள்ள நல்ல பாம்பு. லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்.

கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி உள்ள நல்ல பாம்பு. லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர்.
கரூரில் வீட்டிற்குள் புகுந்த 4 அடி உள்ள நல்ல பாம்பு. லாவகமாக பிடித்த தீயணைப்புத் துறையினர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் சுபாஷ் சந்திர போஸ். நேற்று இரவு இவரது வீட்டுக்குள் 4 அடி உள்ள நல்ல பாம்பு திடீரென புகுந்தது. இதனால் பதட்டமடைந்த வீட்டின் உரிமையாளர், இதுகுறித்து கரூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்புத்துறை வீரர்கள் வீட்டிற்குள் புகுந்த 4 அடி நீளம் இருந்த நல்ல பாம்பினை பிடித்து, சாக்கு பையில் அடைத்து, அடர்ந்த காட்டுப் பகுதியில் விடுவதற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story