காங்கேயம் அருகே நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி

காங்கேயம் அருகே விஜயரங்கன்வலசு பகுதியில் நாய்கள் கடித்து 4 ஆடுகள் பலி
காங்கயம் அருகே கீரனூர் ஊராட்சி விஜயரங்கன்வலசு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னாத்தாள் (வயது 60). இவர் ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுகளை தனது பட்டியில் அடைத்து விட்டு, நேற்று காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்று பார்த்த போது பட்டியில் இருந்த 9 ஆடுகளை நாய்கள் கடித்து குதறியுள்ளது. இதில் 4 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. மேலும் 5 ஆடுகள் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பொதுமக்கள் அங்கு திரண்டு இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் படு காயம் அடைந்த ஆடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இறந்த ஆடுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுப்பதோடு, நாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
Next Story