ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் சாக்கடை நீர் தேக்கம்: துர்நாற்றத்தால் :பொதுமக்கள் அவதி.

ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதியில் சாக்கடை நீர் தேக்கம்: துர்நாற்றத்தால் :பொதுமக்கள் அவதி.
X
ஜெயங்கொண்டம் நான்கு ரோடு பகுதியில் சாட் கடை நீர் தேக்கா சாக்கடை நீர் செல்ல முடியாமல் சாலையில் கூடியதால் துர்நாற்றம் வீசி பொதுமக்கள்,வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்
அரியலூர், பிப்.10- அரியலூர் மாவட்டம்  ஜெயங்கொண்டம் 4 ரோடு பகுதி விருத்தாச்சலம் செல்லும் சாலை ஓரத்தில் சாக்கடை நீர் தேங்கி சாலை முழுவதும் நிரம்பி ஓடியது.இதனால் துர்நாற்றம் தாங்க முடியாமல் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாறு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே வாகன ஓட்டிகள் செல்லும்போது சாலை ஓரத்தில் நடந்து செல்லும் பொது மக்களின் மீது சாக்கடை நீர் தெளிப்பதால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி  .வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் சாக்கடை பாலம் கட்டும்போது அதில் இருந்த கேபில் ஒயர்களை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுவிட்டு நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் அடிக்கடி இது போன்று சாக்கடை அடைப்புகள் ஏற்படுவதாக பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Next Story