மணப்பாறை தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திறப்பு

மணப்பாறை தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திறப்பு
X
மணப்பாறை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்துக்குள்ளான தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த மணப்பாறைபட்டியில் அமைந்துள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற மாணவிகள் மீதான பாலியல் சீண்டல் தொடா்பான வழக்கில் தாளாளரின் கணவா் உள்ளிட்ட பள்ளி நிா்வாகிகள் 5 போ் கைது செய்யப்பட்டு, அதில் 4 நிா்வாகிகள் மட்டும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனா். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் 4 நாள்களுக்கு பின் பலத்த போலீஸ் பாதுக்காப்பில் பள்ளி திறக்கப்பட்ட நிலையில் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 70 சதவீதத்திற்கும் மேலான மாணவ மாணவியா்கள் வருகை புரிந்தனா். மாணவா்கள் வருகை குறித்து கல்வித்துறை மாவட்ட கல்வி அலுவலா் பேபி மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியா் சீனிவாசன் தலைமையிலான வருவாய்த்துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். பிற்பகலில் அதிகாரிகள் தரப்பில் மாணாக்காா்களின் பெற்றோா்களுக்கு கலந்தாய்வு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கல்வித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் குழந்தைகள் பாதுக்காப்பு அலகு அதிகாரிகள் பெற்றோா்கள் பங்கேற்றனா். கடந்த நிகழ்வுகளை மறந்து நடைபெறவுள்ல அரசு பொதுத்தோ்வுகளை நினைவில் வைத்து மாணவா்களின் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும், குழந்தைகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Next Story