ஆம்பூர் அருகே பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்*.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலாற்றில் சட்டவிரோதமாக மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகள் பறிமுதல். *3 பேர் கைது, ஒருவர் தப்பியோட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு பகுதியில் நேற்று இரவு ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியாக சட்டவிரோதமாக பாலாற்றில் இருந்து மணல் கடத்திய வந்த நான்கு மாட்டு வண்டிகளை காவல்துறையினர் பிடிக்க முயற்சித்த போது, ஒருநபர் மாட்டு வண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடியுள்ளார், அதனை தொடர்ந்து பாலாற்றில் மணல் கடத்திய விஜயகுமார், வினோத்குமார், லோகேஷ் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, உமராபாத் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து 3 பேர் மீது உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, தப்போடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்..
Next Story



