வருவாய் அலுவலர் சங்கத்தினர் 4-வது நாளாக தொடர் காத்திருப்பு பணி புறக்கணிப்பு போராட்டம்*

X
விருதுநகரில் வருவாய் அலுவலர் சங்கத்தினர் 4-வது நாளாக தொடர் காத்திருப்பு பணி புறக்கணிப்பு போராட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இ.குமாரலிங்காபுரம் பெரிய கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி ம 28ம் தேதி ஜேசிபி வாகனம் மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கனிம வள திருட்டை தடுக்க தவறியதாக சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் உள்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அதிரடி உத்தரவிட்டார். வருவாய்த்துறை ஊழியர்கள் சஸ்பெண்ட் உத்தரவை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெறக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 4-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஆதார் சேவை மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முடங்கியுள்ளதால்பொதுமக்கள் வருவாய்த் துறையின் சேவைகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் உடன் மாவட்ட நிர்வாகம் தரப்பில் இருந்து பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Next Story

