வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு

X
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் கென்னடி மகன் சகாயகிங்சன் (24). இவருடைய அக்காள் அஸ்வினி அதே பகுதியை சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்கு தவணை முறையில் இன்வெர்ட்டர் பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமல்ராஜ் முறையாக தவணை கட்டவில்லை என தெரிகிறது. இது குறித்து அஸ்வினி தனது தம்பியுடம் கூறியுள்ளார். இந்த நிலையில் சகாய கிங்ஸன், அமல்ராஜ் வீட்டுக்கு சென்று தவணை தொகையை கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரமடைந்த அமல்ராஜ், பிரவீன் (33) வெலிங்டன் (53), ஜெசிமா (50) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி சகாயகிங்சனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சகாய கிங்சன் மனவளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வாலிபரை மிரட்டிய அமல்ராஜ் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

