சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் சங்கிலி திருட்டு

சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் சங்கிலி திருட்டு
X
போலீசார் விசாரணை
சேலம் மின்னாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பவுனம்பாள் (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு காரிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.பிறகு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் சங்கிலி திருட்டு போனது தெரிந்தது. இது குறித்து அவர் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி அகிலாண்டேஸ்வரி. இவரது வீட்டில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலி திருட்டு போனது. இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story