பெற்றோரை இழந்து வாடும் 4குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி அருகே பெற்றோரை இழந்து வாடும் 4குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதிஉதவி அளித்த திமுக எம்எல்ஏ. கல்வி உட்பட அனைத்து அரசு உதவிகளையும் பெற்று தருவதாக உறுதி.
கும்மிடிப்பூண்டி அருகே பெற்றோரை இழந்து வாடும் 4குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிதிஉதவி அளித்த திமுக எம்எல்ஏ. கல்வி உட்பட அனைத்து அரசு உதவிகளையும் பெற்று தருவதாக உறுதி. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை ஊழியர் சுரேன் (41) - தனலட்சுமி (33) தம்பதியருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த மாதம் 30ஆம் தேதி சுரேன் தனது மனைவி தனலட்சுமியுடன் இருசக்கர வாகனத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதிக்குள் செல்ல முற்பட்டபோது பின்னால் வந்த லாரி மோதிய சாலை விபத்தில் தனலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் மனவிரக்தியில் இருந்து வந்த சுரேன், சுடுகாட்டில் தனது மனைவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெற்றோரை இழந்து 4 குழந்தைகள் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் குழந்தைகளை நேரில் சந்தித்து நிதிஉதவி அளித்து ஆறுதல் கூறினார். மேலும் குழந்தைகளின் கல்விக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக கூறினாரா. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக அப்போது உறுதி அளித்தார்.
Next Story