கஞ்சா விற்க முயன்ற 4 பேர் கைது

X
குமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியில் போலீசார் நேற்று இரவு ரோந்து பனியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கம்பாறை பகுதியில் அங்கு சந்தேகப்படும் வகையில் ஐந்து பேர் நின்று கொண்டு இருந்ததை கண்ட போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். சோதனை நடத்திய போது 90 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலத்தை போலீசார் பார்த்தவுடனே அந்த கும்பலில் இருந்த ஒரு நபர் நைசாக தப்பி ஓடிவிட்டார். இதை அடுத்து மற்ற நான்கு பேரையும் போலீசார் சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் நல்லூர் பகுதியை சேர்ந்த முத்தழகு (26),மைலாடி சுனில் (21), லீபுரம் அசோக் (26) கைலாசபுரம் முகேஷ் ராஜா (23) என்பது தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடியது சுசீந்திரம் மாரியப்பன் (31) என்பதும் தெரியவந்துள்ளது. இதை அடுத்து நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 90 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்தனர். தப்பி ஓடிய மாரியப்பனை தேடி வருகின்றனர்.
Next Story

