காடையூரில் நாய்கள் கடித்து 4 ஆட்டுக்குட்டிகள் பலி

காடையூரில் நாய்கள் கடித்து 4 ஆட்டுக்குட்டிகள் பலி 4 ஆடுகள் படுகாயம்
காடையூரில் நாய்கள் கடித்து 4 ஆட்டுக்குட்டிகள் பலி - 4 ஆடுகள் படுகாயம்  காங்கேயம் அடுத்துள்ள காடையூர் அருகே கோட்டைமேடு பகுதியில் விவசாயம் செய்துகொண்டு கால்நடைகளை வளர்த்து வருபவர்  சுலோச்சனா (68). இன்று காலை ஆடுகளை காட்டிற்குள் மேய்வதற்கு விட்டுவிட்டு மாலை சென்றுள்ளார்.அப்போது 3க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஆடுகளை கடித்து பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதனால் நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டது.பின்னர் அருகே சென்று பார்த்த பொது 8 வெள்ளாடுகள் மற்றும் குட்டிகளை கடித்து விட்டது. இதில் 4 ஆட்டுக்குட்டிகள் படுகாயத்துடன் இறந்து கிடந்துள்ளது. மேலும் 4 ஆடுகள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டுள்ளது. இது குறித்து வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காங்கேயம் பகுதிகளில் தொடர்ச்சியாக நாய்கள் தாக்கி ஆடுகள் பலியாவது வாடிக்கையாக நடைபெற்றுவருகின்றது. இது குறித்து இழப்பீடு கேட்டு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் அரசு செவிசாய்க்கவில்லை என்பது விவசாயிகளின் வேதனையாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும் இன்று இறந்த மற்றும் காயம் பட்ட ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Next Story