குறிஞ்சாகுளத்தில் உயிர் நீத்த 4 தியாகிகளுக்கு வீரவணக்கம்


உயிர் நீத்த 4 தியாகிகளுக்கு வீரவணக்கம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள குருஞ்சாக்குளம் மண்ணில் உயிர் நீத்த தியாகி சுப்பையா, சக்கரபாண்டி, அம்பிகாபதி, அன்பு உள்ளிட்ட 4 பேர்க்கு இன்று சங்குப்பட்டி கிராமத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விடுதலை சிறுத்தை கட்சியின் டாஸ்மார்க் தொழிலாளி விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் முருகன் மற்றும் குருவிகுளம் ஒன்றிய செயலாளர் கனியமுதன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தை கட்சியின் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் லிங்கவளவன் கலந்து கொண்டார். இதில் திருவேங்கடம் நகர செயலாளர் சிவக்குமார், சங்கு பட்டி கிளைச் செயலாளர் மணிவாசகம், பாலமுருகன், மணிராஜ், குருசாமி, முத்துராஜ் உள்ளிட்ட ஏராளமான விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்.
Next Story