சுசீந்திரம் : 4 பேருக்கு அரிவாள் வெட்டு

X
கன்னியாகுமரி அருகே உள்ள சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (25). எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது நண்பர்கள் வைரவன், இசக்கி ராஜா, முகேஷ் ஆகியோருடன் குலசேகரன் புதூரில் நடந்த கோயில் திருவிழாவை பார்க்க சென்றார். அப்போது கோவிலில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை பார்த்த சக்திவேல் மற்றும் நண்பர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நாகர்கோவில் சென்று விட்டு மீண்டும் குலசேகரன்புதூருக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களை வழி மறித்த கண்டால் தெரியும் 6 பேர் கும்பல் சக்திவேல் உள்ளிட்டோரை சுத்தி வளைத்து, எப்படி கோயிலில் எங்களிடம் தகராறு செய்யலாம் என கேட்டு, அறிவாளால் வெட்டி உள்ளார்கள். இதில் சக்திவேல், இசக்கி ராஜா, முகேஷ் மற்றும் வைரவன் உள்ளிட்டவருக்கு வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். பின்னர் அந்த வழியாக வந்தவர்கள் நான்கு பேரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் நான்கு பேரை வெட்டி விட்டு தப்பி ஓடிய கண்டால் தெரியும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story

