ரூ. 4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை

X

மதுரை திருமங்கலத்தில் ஆடுகள் விற்பனை ரூ. 4 கோடிக்கு மேல் விற்பனையாகி முள்ளு.
ரம்ஜான் பண்டிகை வருகிற மார்ச் 31-ல் கொண்டாடப்பட உள்ள நிலையில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய ஆட்டுச் சந்தையான திருமங்கலம் நகராட்சி ஆட்டுச் சந்தையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று (மார்ச் . 28) நடந்த ஆட்டுச் சந்தையில் அதிகாலை 3:00 மணி முதலே சந்தை களைகட்ட தொடங்கியது .ரம்ஜான் பண்டிகை நெருங்குவதால் ஆடுகளின் விலை ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை விற்றது. கடந்தாண்டை விட ஆடுகளின் விலை அதிகரித்து இருந்ததால் விற்பனை மந்தமாக இருந்த நிலையிலும் ரூ. 4 கோடி அளவுக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளது.
Next Story